முந்திச் செல்வோம்..!
وَالسَّابِقُونَ السَّابِقُونَ
முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே! இவர்கள் தான் அல்லாஹ்வுக்கும்) மிக
நெருங்கியவர்கள் திருக்குர்ஆன்:- 56:10,1
போட்டி உலகம்
இது
இவ்வுலகம் போட்டிகள் நிறைந்தது. இங்கு போட்டிகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம்.
இப்போட்டிகளில் வெற்றி ஒன்றே இலக்கு. வியாபாரப் போட்டியில் இலாபம் இலக்கு. வேலைப்
போட்டியில் பதவி உயர்வு இலக்கு. விளையாட்டுப் போட்டியில் பதக்கம் இலக்கு. வெற்றி
பெற்ற தகுதிக்கேற்றவாறு பரிசுகளிலும் வேறுபாடு காணப்படும். முதலிடத்தில் வந்தால்
தங்க மெடல். இரண்டாவதாக வந்தால் வெள்ளிப் பதக்கம் மூன்றாவது என்றாலோ வெண்கலம்தான்.
இவ்வாறே மறு
உலகிலும் பரிசுகள் உண்டு. உலகமே அந்தப் போட்டிக்கான களம். நற்செயல்களில்
முந்துவதுதான் போட்டி. செயல்களில் முந்துவதற்குத் தகுந்தவாறு வழங்கப்படும்
பரிசுகளும் வேறுபடும்.
மிகப்
பிரியமானவர் யார்...?
ஹள்ரத் உஸாமா
(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்)
அவர்களுடன்
அமர்ந்திருந்தேன். அந்நேரம் ஹள்ரத் அலீ (ரலி), ஹள்ரத் அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரும் நபி (ஸல்)
அவர்களின் (வீட்டின் உள்ளே வர அனுமதி கோரினர். அப்போது அண்ணலார் (ஸல்) அவர்கள் என்னிடம்
"அவ்விருவரும் எதற்காக வந்துள்ளனர் என்பதை நீர் அறிவீரா? எனக் கேட்டார்கள். 'எனக்குத் தெரியாது என நான் பதில் கூறியதும். சரி, அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள் என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். இருவரும் வந்தனர்.
அல்லாஹ்வின்
தூதரே! நாங்கள் தங்களிடம் சில விஷயங்களைப் பற்றி கேட்க வந்துள்ளோம். (முதலாவது)
தங்களுடைய குடும்பத்தாரில் உங்களுக்கு மிகவும் பிரியமுள்ள நபர் யார்? -'என்னுடைய மகள் ஃபாத்திமா (ரலி தான்' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
தங்கள்
குடும்பம் அல்லாதோரில் யார் என கேள்வி தொடர்ந்தது. "என் குடும்பத்தாரில்
யார்மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ அவரும், எவர்மீது நான் அன்பு கொண்டேனோ அவரும், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களும்"
என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். பின்னர் 'யார்' என அவ்விருவரும் கேட்டனர். 'அலீ (ரலி)' என அண்ணலார் பதிலளித்தார்கள்.
உடனே ஹள்ரத்
அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! தங்களுடைய தந்தையுடன் பிறந்த
சகோதரரைக் கடைசியாக ஆக்கிக் கொண்டீர்களே! என குறுக்கீடு செய்தார்கள். அதற்கு
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: "நிச்சயமாக அலீ (ரலி)
அவர்கள் உங்களுக்கு முன்பாகவே மக்காவைத் துறந்து மதீனா வந்துவிட்டார்கள்."
நூல்: திர்மிதீ
ஆக, 'ஹிஜ்ரத்' எனும் புலம்பெயர்வு இஸ்லாமிய வரலாற்றில்
முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது. அதில் எவர் முந்திக் கொண்டாரோ அவர் அண்ணலாரின்
பாசத்திலும் முந்திக்கொண்டார். குடும்ப உறவுகள்கூட பிற்படுத்தப்பட்டுவிட்டது
உக்காஷா (ரலி)
முந்திவிட்டார்
என்
சமுதாயத்தின் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம்
புகுவார்கள் என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற நபித் தோழர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?' என வினவினார்கள்
(அல்லாஹ்வுக்கு
இணை கற்பிக்கும் சொற்களைக்கொண்டு) மாந்திரீகம் பார்த்திருக்கமாட்டார்கள். பறவை
ஜோதிடம், சாஸ்திர சம்பிரதாயம்
பார்த்திருக்கமாட்டார்கள். தங்கள் காரியங்களில் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை
வைப்பார்கள்' என அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
பதிலளித்தார்கள்.
இந்நேரம் ஹள்ரத்
உக்காஷா பின் முஹ்ஸின் (ரலி) அவர்கள் எழுந்து வேண்டினார். "அல்லாஹ்வின்
தூதரே! அத்தகையோரில் என்னையும் சேர்க்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள்" உடனே
நபி (ஸல்) அவர்கள் நீர் அவர்களில் உள்ளவரே" என்று கூறினார்கள். (இந்நிகழ்வைக்
கவனித்துக் கொண்டிருந்த) மற்றொரு நபித்தோழர், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அவ்வாறு
வேண்டுங்களேன்" என்று கேட்டார். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "உக்காஷா
உம்மை முந்திக்கொண்டார்" என பதிலளித்தார்கள்.
(அறிவிப்பாளர்:
இம்ரான் பின் ஹுசைன், நூல்: முஸ்லிம்)
அபூஹுரைரா (ரலி)
அள்ளிக்கொண்டார்
ஹள்ரத் ஜைத்
பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான்
அபூஹுரைரா (ரலி), இன்னொரு நபித்தோழர் ஆகிய மூவரும் ஒரு
நாள் பள்ளியில் அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம் அப்போது
அருமை நாயகம் {ஸல்) அவர்கள் வந்து எங்களுடன் அமர்ந்து
கொண்டார்கள். நாங்கள் பிரார்த்தனையை நிறுத்தி மெளனமானோம் அப்போது அண்ணலார் நீங்கள்
செய்துகொண்டிருந்த காரியத்தை (பிரார்த்தனையை)த் தொடருங்கள்" என்று
பணித்தார்கள்.
நானும், அந்த நபித்தோழரும் அபூஹுரைரா (ரலி)
அவர்களை முந்தி
(பலவேறு தேவைகளை
அல்லாஹ்விடம் கேட்டு) பிரார்த்தனை செய்தோம் எங்களின் (ஒவ்வொரு) பிரார்த்தனைக்கும்
அண்ணலார் ஆமீன் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எங்களிருவருக்குப் பின்பு அபூஹுரைரா (ரலிஅவர்கள் யா அல்லாஹ்! எனக்கு முன்பு என் இரு தேழர்களும்
எவற்றையெல்லாம் கேட்டார்களோ அவற்றையும் மறதி இல்லாக் கல்வியை அதிகப்படியாகவும்
வேண்டுகிறேன். வழங்கி அருள் புரிவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். அண்ணலார்
ஆமீன் கூறினார்கள்
உடனே நாங்கள்
சுதாரித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதரே! நாங்களும் மறதியில்லாக் கல்வியை
அல்லாஹ்விடம் வேண்டுகிறோம் (நீங்கள் ஆமீன் கூறுங்கள்) என்று வேண்டினோம். அதற்கு
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தவ்ஸி' கிளையைச் சேர்ந்தவர் (அபூஹுரைரா)
உங்களிருவரையும் முந்தி(க் கேட்டுவிட்டார் (எனவே, அந்த விஷேசக் கல்வி அவருக்கு மட்டும் கிட்டட்டும்) என்று
பதிலளித்துவிட்டார்கள். நூல்:- ஹாகிம்
முதலிடம் தந்த
துஆ
மறதியில்லா
கல்வி செல்வம் தனக்கு முழுமையாக கிடைப்பதற்கு
அருமை நாயகம்
(ஸல்) அவர்களின் ஆமீனை பயன்படுத்திக் கொள்வதில் தன் இரு தோழர்களைவிட
முந்திக்கொண்டார்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள். சுமார் 5374 நபிமொழிகளை அறிவித்து சக தோழர்களைவிட
நபிமொழிகளை அறிவிப்பதில் முதலிடத்தை பெற்றுள்ளார்கள்.
ஒவ்வொரு
மனிதனுக்கும் ஏதேனும் ஒரு நேரத்தில் வாழ்வில் வெற்றிபெற நல்ல வாய்ப்பை இறைவன்
ஏற்படுத்துகின்றான். அதைப் பயன்படுத்தி முந்திச் சென்றவன் வெற்றி பெற்று
விடுகிறோன். முதுமைக்கு முன்பு இளமையைப் பயன்படுத்திக்கொள். வறுமைக்கு முன்பு
செழிப்பைப் பயன்படுத்திக்கொள் நோய்க்கு முன்பு உடல் ஆரோக்கியத்தைப்
பயன்படுத்திக்கொள் என்று ஒரு நபிமொழி கூறுகிறது.
தியாகத்தில்
முந்தியவர்கள்
وَيُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَأُولَٰئِكَ مِنَ الصَّالِحِينَ
மேலும் அவர்கள் நன்மையான காரியங்களைச் செய்வதற்கு விரைகின்றனர். இத்தகையோர்தான்
நல்லடியார்கள் திருக்குர்ஆன்:-
13:114
ஒரு சமயம் உமர் (ரலி) அவர்களது வீட்டிற்கு முன்பு அபூசுப்யான் (ரலி) சுஹைல்
(ரலி), பிலால் (ரலி), சுஹைப் (ரலி) ஆகியோரும் வேறுசில
நபித்தோழர்களும் நின்றனர். உமர் (ரலி) அவர்களின் வீட்டுக்குள் செல்வதற்கு அனுமதி
கோரியவர்களாக அவர்கள் காத்திருந்தனர். அபூசுப்யான் (ரலி) அவர்கள் ஒரு காலத்தில்
மக்களின் மாபெரும் தலைவராக மதிக்கப்பட்டார்கள்.
பிலால் (ரலி), சுஹைப் (ரலி) ஆகிய இருவரும் ஒரு
காலத்தில் அடிமைகளாக வாழ்ந்தவர்கள். வெளியே நின்றிருந்தவர்களில் இவ்விருவருக்கு
மட்டுமே உள்ளே வர உமர் (ரலி) அவர்கள் அனுமதித்தார்கள். பெரும் தலைவராக ஒரு
காலத்தில் அதிகாரம் செலுத்தி வந்த அபூசுப்யான் (ரலி) அவர்களுக்கு எப்படியிருக்கும்
ஆனாலும் அவர் தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு அருகே நின்றிருந்த ஸுஹைல் (ரலி)
அவர்களிடம் கூறினார்கள்.
சுஹைலே! இப்படி
ஒதுக்கப்பட்டதற்கு நாம்தான் காரணம். இஸ்லாத்
தின்பால்
அவர்களும் அழைக்கப்பட்டார்கள். நாமும் அழைக்கப்பட்டோம் ஆனால் அவர்கள் நம்மை
முந்திச் சென்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். நாமோ காலம் கடத்தித் தாமதமாகவே
இஸ்லாத்தை ஏற்றோம் இந்த உலகில் உமர் (ரலி) அவர்களின் வீட்டு வாசலிலேயே நமக்கு இந்த
நிலை என்றால் நாளை அல்லாஹ்வின் சமூகத்தில் நம் நிலை எப்படியிருக்குமோ?" என்று அபூசுப்யான் (ரலி) அவர்கள்
கூறினார்கள்
இறைத்தூதரின் பிரார்த்தனை
அபூரைஹானா (ரலி), ஷம்ஊன் பின் ஸைத் (ரலி) ஆகிய இருவரும்
அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்
நாங்கள் ஒரு போரில் கலந்துகொண்டோம். ஒரு நாள் இரவு நாங்கள் ஒரு மேடான பகுதியில்
இரவு முழுவதும் தங்கினோம். அச்சமயம் கடுங்குளிர் எங்களைத் தாக்கியது. அதனால் சிலர்
குழி தோண்டி அதற்குள் இருந்துகொண்டு தம்மீது கேடயத்தைப் போட்டு
(மறைத்து)க்கொள்வதைப் பார்த்தேன். இதைக் கண்ட அண்ணலார் இன்றிரவு நம்மைக் காப்பவர்
யார்? அவருக்கு மேன்மைக்காக நான் பிரார்த்தனை
செய்வேன்" என்றார்கள்.
உடனே அன்சாரித்
தோழர்களில் ஒருவர் நான் (காவல் காக்கிறேன்)
அல்லாஹ்வின்
தூதரே என்றார். அண்ணலார் நீர் அருகில் வாரும்
என்றார்கள்.
அண்ணலாருக்கு அருகில் அவர் வந்தார். நீர் யார்? எனக்
கேட்டார்கள்
அண்ணலார். அந்தத் தோழர் தமது பெயரைக் கூறனார் உடனே அவருக்காக அண்ணலார் அதிகம்
பிரார்த்தனை செய்தார்கள் அவருக்கு அண்ணலார் செய்த பிரார்த்தனையைச்
செவியுற்ற நான் அல்லாஹ்வின் தூதரே! நானும் (காவல் காக்கிறேன்)" என்றேன். உடனே "அருகில் வாரும்" என்றார்கள். நான்
அண்ணலாருக்கு அருகே சென்றேன் நீர் யார்? என்றார்கள். நான் அபூரைஹானா என்றேன்.
உடனே அண்ணலார் அந்த அன்சாரித் தோழருக்கு செய்த பிரார்த்தனையைவிட (எனக்கு) சற்றுக்
குறைவாகவே பிரார்த்தனை செய்தார்கள். (நூல்: முஸ்னது அஹ்மத், தாரமீ)
وَلِكُلٍّ دَرَجَاتٌ مِمَّا عَمِلُوا ۚ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا
يَعْمَلُونَ
(நபியே...!
அவர்கள்) யாவருக்கும் அவர்களின் செயல்களுக்குத் தக்க பதவிகளுண்டு. (அல்குர்ஆன், 6:132)
முந்திக்கொள்ள முயற்சி செய்வோம்.
இஸ்லாத்தை ஆரம்ப
காலகட்டத்தில் ஏற்றுக்கொண்ட ஆண்களில் முதலாமவர் அபூபக்ர் (ரலி) அவர்களும்
பெண்களில் கதீஜா (ரலி) அவர்களும் ஆவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
சமுதாயத்தில் மிகவும் சிறப்பு பெற்றவர்கள் இந்த இருவர்தான். இவர்களுக்கு
அடுத்தபடியாக மற்ற நபித்தோழர்களின் சிறப்புகள் இருக்கிறது. ஏனெனில் இந்த இருவரும்
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் மற்ற தோழர்களைவிட முந்திச் சென்று முன்னுரிமை
பெற்றார்கள்.
அண்ணல் நபி
(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னுடைய தேழர்களைத் திட்டாதீர்கள். உங்களில்
யாரேனும் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தை இறைவழியில் செலவு செய்தாலும் என் தோழர்கள்
இரு கை நிறைய அல்லது அதில் பாதி இறைவழியில் செலவு செய்ததற்குச் சமமாக முடியது அறிவிப்பாளர்:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரீ, முஸ்லிம்.
இஸ்லாம் வளர்ந்தோங்க நபித்தோழர்களில் ஒவ்வொருவரும் தன்னை முதலில் அர்ப்பணித்தார்கள்.
அதுவே அவர்களை அருமை நாயகம் (ஸல்) அவர்களால் இந்தளவுக்குப் புகழப்படக் காரணமாகும்.
நற்செயலில் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு செயலாற்றினால் இறைநெருக்கமும்
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நெருக்கமும் நிச்சயம் நமக்குக் கிட்டும்.
மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.
No comments:
Post a Comment