Search This Blog

Tuesday, 27 October 2020

குழப்பம் தவிர்ப்போம்

 

குழப்பம் தவிர்ப்போம்


قَالَ يَبْنَؤُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي إِنِّي خَشِيتُ أَنْ تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي


(அப்போது ஹாரூன்) என் தாய் மகனே! என் தலையையும் தாடியையும் பிடித்திழுக்காதீர். (நான் அச்சமயமே அவர்களை விட்டு விலகி இருந்தால்) இஸ்ராயீலின் சந்ததிகளுக்கிடையில் நீ பிளவை ஏற்படுத்தி விட்டாய். என் சொல்லை நீ மதிக்கவில்லை என்று நீர் என்னை கடுகடுப்பீரென்று நிச்சயமாக நான் பயந்(தே அவர்களுடன் இருந்)தேன் என்று கூறினார். திருக்குர்ஆன்:-20:94


மனிதன் தன் வாழும் காலம் முழுவதும் தான் எந்த வகையான குழப்பங்களும் சிக்கிவிடாமலும்பிறரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடாமலும் வாழ முயற்சிக்க வேண்டும். அதனால் சிலவேளை குழப்பத்திற்கு அஞ்சி மார்க்கத்திற்கு உட்பட்ட விதத்தில் இடத்திற்கும், சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் வளைந்து கொடுத்துப் போகலாம் தவறொன்றுமில்லை.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ عَرْشَ إِبْلِيسَ عَلَى الْبَحْرِ فَيَبْعَثُ سَرَايَاهُ فَيَفْتِنُونَ النَّاسَ فَأَعْظَمُهُمْ عِنْدَهُ أَعْظَمُهُمْ فِتْنَةً )  இப்லீஸின் சிம்மாசனம் கடலின் மீது அமைந்துள்ளது. (அங்கிருந்தே) தன் படைகளை அனுப்பிமக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறான். மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் மரியாதைக்குரியவன் ஆவான். அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5418


ஏற்பட்டு விடக்கூடாது


நபி மூசா (அலை) அவர்கள் இறை உத்தரவின்படி தவ்ராது என்ற வேத நூல் வாங்கி வர தூர் மலைக்கு சென்று விட்டார்கள். அதற்குள்ளாக அவர்களின் சமுதாயமான பனீ இஸ்ரவேலர்கள்  காளைக்கன்றை  வணங்க ஆரம்பித்து விட்டனர். பிறகு மூசா (அலை) அவர்கள் இதைப்பார்த்து வேதனைப்பட்டு இதற்கு யார் காரணம்ஏது என்னவென்று விசாரித்தார்கள்.


அதற்குப் பிறகு அந்நேரத்தில் தனது பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த சகோதரர் நபி ஹாரூன் (அலை) அவர்களிடம் வந்துஅவரின் நெற்றி உரோமத்தையும்தாடி உரோமத்தையும் இழுத்து பிடித்தவாறு, "அவர்கள் வழிதவறும் வரை ஏன் விட்டு வைத்தீர்அவர்கள் காளைக் கன்றை அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்கிக்கொண்டிருந்ததை ஏன் தடுக்கவில்லைஎன்று கோபத்துடன் வினவினார்கள்.


அதற்கு ஹாரூன் (அலை) அவர்கள், "நான் எவ்வளவோ சொல்லியும் பார்த்தேன்தடுத்தும் பார்த்தேன்! என் பேச்சை அவர்கள் கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை! நான் அவர்களை தடுக்க முயற்சித்தால் என்னைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சினேன்மேலும் அவர்களோடு சண்டை போட்டு அதன் காரணமாக அவர்களிடையே பிளவு ஏற்பட்டு விட்டால் 'பனீ இஸ்ரவேலர்களின் ஒற்றுமையை நான் குலைத்துவிட்டேன்!என்று நீர் என் மீது கோபம் கொண்டால் என்ன செய்வதென்று அஞ்சினேன்!" என்று மிகவும் அடக்கமாக பதிலளித்தார்கள்.


இந்த வரலாற்று தகவலை தலைப்பில் காணும் திருவசனமும் மேலும் சில வசனங்களும் (தாஹா 83 முதல் 96)  விவரிக்கிறது.


வெறுப்பு தோன்றிவிடலாம்


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் (கஅபாவை ஒட்டியுள்ள ஹிஜ்ர் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, "இதுவும் கஅபாவில் சேர்ந்ததா?"  வினவினேன். அதற்கு அண்ணலார் "ஆம்" என்றார்கள். நான்அப்படியானால் கஅபாவுடன் இதை அவர்கள் ஏன் இணைக்கவில்லை?" என்று வினவினேன். அதற்கு அண்ணலார் ( إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمُ النَّفَقَةُ ) "உன் சமூகத்தாருக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தது" என்று பதிலளித்தார்கள்.


நான்" கஅபாவின் வாசலை உயரமாக வைத்திருப்பதற்கு காரணம் என்ன?" என்று வினவினேன். அதற்கு அண்ணலார், ( فَعَلَ ذَلِكِ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا، وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ أَنْ أُدْخِلَ الْجَدْرَ فِي الْبَيْتِ وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ ) "தாம் நாடியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தாம் நாடியவர்களைத் தடுத்து விடுவதற்காகவும்தான் உன் சமூகத்தார் அவ்வாறு செய்தார்கள். உன் சமூகத்தார் அறியாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள். (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பதால்அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கில்லாவிட்டால்நான் இந்த வளைந்தச் சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியோடு சேர்த்தாற்போல் ஆக்கியிருப்பேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-1584, முஸ்லிம்-2592


விட்டு விடுங்கள்


மறுமை நாளை அஞ்சிக்கொள்ளுங்கள்பூமியில் குழப்பவாதிகளாக அலையாதீர்கள். திருக்குர்ஆன்:- 29:36


ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் ('பனூ முஸ்தலிக்எனும்) ஓர் அறப்போரில் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் (விளையாட்டாக)ப் பிட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரித் தோழர், "அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார். அந்த முஹாஜிர் தோழர், "முஹாஜிர்களே! (உதவிக்கு வாருங்கள்) என்று அழைத்தார்.


அப்போது அண்ணலார், (அங்கு வந்து) ( مَا بَالُ دَعْوَى أَهْلِ الْجَاهِلِيَّةِ ) "இது என்ன அறியாமைக்கால கூப்பாடு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நாயகமே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்" என்று கூறினர். அப்போது அண்ணலார், ( دَعُوهَا فَإِنَّهَا خَبِيثَةٌ ) "இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (இன மாச்சரியங்களைத் தூண்டுகின்ற) இக்கூப்பாடுகள் நாற்றம் வீசும் கூடியவை" என்று கூறினார்கள்.


அப்போது (மதீனா வாசியான நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபைஇதைக் கேட்டுவிட்டு "அப்படியா அவர்கள் (முஹாஜிர்கள்) செய்துவிட்டார்கள்அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவுக்கு திரும்பிச் சென்றால் (எங்கள் இனத்தாரான அன்சாரிகள்) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை நிச்சயமாக அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்" என்று (அன்சாரிகளுக்காகப் பரிந்து) பேசினான்.


(இச்செய்தி அண்ணலாருக்கும் நபித்தோழர்களுக்கும் எட்டியபோது) உமர் (ரலி) அவர்கள் எழுந்து, "என்னை விடுங்கள் இந்த நயவஞ்சகனின் (அப்துல்லாஹ் பின் உபையின்) கழுத்தை வெட்டி விடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ( دَعْهُ لاَ يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ مُحَمَّدًا يَقْتُلُ أَصْحَابَهُ ) "அவரை  (அப்துல்லாஹ் பின் உபையை) விட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3518, முஸ்லிம்-5042, திர்மிதீ-3227


முஸ்லிம் போன்று பாவனை செய்து கொண்டு பெரும் குழப்பம் ஏற்படுத்தக்கூடியஅப்துல்லாஹ் பின் உபை போன்ற நயவஞ்சகன் கொலை செய்யப்படுவதற்கு உரியவனாக இருந்தும்கூட அண்ணல் நபி (ஸல்) அவர்கள்அந்த நயவஞ்சகனை கொல்ல வேண்டாம் என்று தடுத்துள்ளார்கள். காரணம் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் இவன் பெரும் குழப்பவாதிநயவஞ்சகன் என்று தெரியும். ஆனால்பிற மக்களுக்கு இவனின் உண்மை நிலை தெரியாது. எனவே அண்ணலாரின் அனுமதியின் அடிப்படையில் இவனை கொன்றுவிட்டால்பிறர் பார்வையில் "முஹம்மதே தன் தோழர்களை கொல்கிறார்" என்று தவறாக தோன்றிவிடும். அதனால் குழப்பம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இஸ்லாத்தைப் பற்றியும் தவறாக எண்ணி விடுவார்கள் என்று அண்ணலார் அஞ்சினார்கள்.


நாவை விலைக்கு வாங்கினேன்


அப்பாஸிய கலீஃபா மஹ்தீயுடைய ஆட்சி காலத்தில் ஒருவர் ஒரு செருப்பை கொண்டு வந்து "இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செருப்பு எனக்கூறி அன்பளிப்பாகக் கொடுத்தார். உடனே மன்னர் மஹதீ அவர்கள் அதைப் பெற்று அவர் எதிரே அதன்மீது முத்தமிட்டுஇரு கண்ணிலும் ஒத்தி கொண்டு மரியாதை செய்தார் மேலும் அவருக்கு 10,000 வெள்ளிக்காசுகள் அன்பளிப்பாகக் கொடுத்தார்.


பின்னர் அம்மனிதர் திரும்பி சென்றதும் மன்னர் மஹதீ அவர்கள் "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த செருப்பை அண்ணலார் பார்த்தது கூட இல்லை என்று எனக்கு நன்றாக தெரியும். இதை அம்மனிதனிடம் கூறினால் அவன் மக்களிடம் சென்று குழப்பத்தை உண்டாக்குவான். நான் அண்ணலாரின் செருப்பை மன்னரிடம் கொடுத்தேன் அதை அவர் வாங்க மறுத்து விட்டார் எனக் கூறுவான் அவன் இவ்வாறு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடக்கூடாது என்பதற்காக 10,000 வெள்ளிக் காசுகளை கொடுத்து அவன் நாவை விலைக்கு வாங்கினேன்" என்று கூறினார்.


மன்னர் மஹதீ அவர்கள் அந்த செருப்பை பார்த்ததும்இதை அண்ணலார் பார்த்தது கூட இல்லை என்று உறுதியாகக் கூறியதற்கு காரணம் அண்ணலாரின் செருப்பை அவர் ஏற்கனவே பார்த்து இருப்பதே ஆகும். நூல்:- இப்னு கஸீர்


எனவே குழப்பம் ஏற்படும் என்றிருந்தால் சில தருணங்களில் நன்மையான செயலைக் கூட விட்டுவிடலாம். நிலை அறிந்து செயலாற்றுவதே புத்திசாலித்தனமாகும் என்கிறது இஸ்லாம். நம் மூலமாக  எந்த சந்தர்ப்பத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டுவிடாமல் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 



 

 

No comments:

Post a Comment

கர்பலாவை நோக்கி!

  கர்பலாவை நோக்கி!   لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய வரலாறுகளில் படிப்பினை நி...